Advertisment

"வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளும் முக்கியம்" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு... 

admk party general committee meeting in chennai cm speech

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளும் மிக முக்கியம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் அ.தி.மு.க. கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3,300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisment

கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்றத் தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால்தான் அ.தி.மு.க. வெற்றி பெற முடியும். அண்ணா, எம்.ஜி.ஆர்., போன்ற ஆளுமை மிக்க தலைவர் நான் அல்ல. ஆனால் கட்சிக் கொடுத்தப் பணியைச் சிறப்பாக செய்துகொண்டிருப்பதாக நம்புகிறேன். நான்கு ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியைக் கொடுத்ததாக நான் நம்புகிறேன். தேர்தலில் திட்டம் போட்டு சரியாக செயல்பட்டால் நமக்கு வெற்றி உறுதி. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கும். ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதால் சிந்தாமல் சிதறாமல் வாக்குகளைப் பெற வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் வாக்குகளும் மிக முக்கியம்.

admk party general committee meeting in chennai cm speech

ஆளுநரிடம் ஸ்டாலின் கொடுத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஒரு பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்லி உண்மையாக்கப் பார்க்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். விவாதத்திற்கு அழைத்தால் எங்கேயோ உள்ள வழக்குகளைத் திரும்பப் பெற கூறுகிறார் ஸ்டாலின். மனமாட்சிமையை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு தேர்தலில் வெற்றிபெறுவோம். நான் இரவு, பகல் பாராமல் உழைக்கதயாராக உள்ளேன். உழைப்பு, ஒற்றுமை இருந்தால் வெற்றி நிச்சயம். சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி. கே.பி.முனுசாமி,நத்தம் விஸ்வநாதன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருக்கும் நன்றி. வரும் சட்டமன்றத் தேர்தல் மூலமாக வாரிசு அரசியலை முறியடிக்க வேண்டும். தமிழகத்தை ஆளக் கூடியத் தகுதி அ.தி.மு.க.வுக்கு உள்ளது என்ற நற்சான்றிதழை மக்கள் கொடுத்துள்ளனர். மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தை இன்னும் ஒரு மாதத்தில் திறக்க உள்ளோம்" என்றார்.

Speech cm edappadi palanisamy Meeting admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe