Advertisment

"எந்த அச்சுறுத்தலும் அ.தி.மு.க.வை நெருங்க முடியாது"- ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். கூட்டறிக்கை!

admk party eps and ops statement

Advertisment

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (17/06/2021) கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

அதில், "ஊதி விளையாடுவதற்கு ஒன்றும் அ.தி.மு.க. என்பது புதுவெள்ளத்தில் மிதந்து வரும் நுரை பூ அல்ல. தொண்டர்களின் வீரம், தியாகத்தில் விளைந்த நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தி.மு.க.வின் இயற்கை குணாதிசயங்கள் மக்களை வாட்டி வதைக்கிறது. அ.தி.மு.க. ஐ.டி. பிரிவினர் மீதான தாக்குதலை ஏவிவிடுவதில் தி.மு.க.வினர் தீவிரமாக உள்ளனர். வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அடிப்படை கடமை தி.மு.க.வுக்கு இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். பத்தாண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்போது மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. ஆட்சிக்கு வந்து ஒரு மாதமே முடிந்த நிலையில் வாக்களித்த மக்களை வஞ்சிப்பதில் தி.மு.க. ஆட்சி முதலிடம்" எனகுற்றம் சாட்டியுள்ளது.

OPANEER SELVAM edappadi pazhaniswamy ADMK PARTY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe