admk party 49 th anniversary deputy cm ops flag

Advertisment

அ.தி.மு.க.வின் 49- வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அ.தி.மு.க கட்சிக்கொடியை ஏற்றினார் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

admk party 49 th anniversary deputy cm ops flag

Advertisment

இதனிடையே, தாயார் மறைவால் சொந்த ஊரில் உள்ள அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம், சிலுவம்பாளையம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு, தன் வீட்டுக்கு எதிரே இருக்கும் கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடியைஏற்றினார்.

admk party 49 th anniversary deputy cm ops flag

அ.தி.மு.க.வின் 49 -ஆவது ஆண்டு தொடக்க விழாவை, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.