'ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது'-ஓ.பி.எஸ் பேச்சு!!

admk ops speech

தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒன்றல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேசியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நடந்த மாவட்ட கட்சிநிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசும், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா அதிமுகவை வலுவான இயக்கமாகவும் கோட்டையாக மாற்றியுள்ளனர். எனக்குப் பின்னாலும் இந்த இயக்கம் 100 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கும் என ஜெயலலிதா தீர்க்கமாக கூறினார். தற்போது கட்சி வலுவாக உள்ளது.கட்சியின் வளர்ச்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்களாக நாம் செயல்பட்டு வருவது தான் கட்சிக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.

கடமையை செய்யுங்கள் பிரதிபலன் தானாக வந்து சேரும். வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல்,சேர்த்தல் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து பகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும். இப்படி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஒன்றல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

admk jayalalitha ops stalin
இதையும் படியுங்கள்
Subscribe