admk OPS Insistence

Advertisment

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு சிறுமி கடந்த 15ஆம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்த நிலையில், மதிய வேளையில் காணாமல்போன சிறுமி பள்ளிக்கு அருகில் உள்ள புதரில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி கொலைக்கு நீதி வேண்டும் என பெற்றோர்கள் குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் உறுதியளித்ததைத் தொடர்ந்து உடலை நேற்று (16.12.2021) பெற்றுக்கொண்ட பெற்றோர், உடலைத் தகனம் செய்துள்ளனர்.

இதேபோல் கோவையிலும் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அந்தக் கொலை சம்பவத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாகசிறுமியின் தாயின் நண்பர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் கொடைக்கானலில் நிகழ்ந்த சம்பவம் குறித்த எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த சம்பவத்தில் போலீசார் தீர விசாரிக்க வேண்டும். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.