Advertisment

அதிமுக எம்பி முகமது ஜான் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

ADMK MP INCIDENT POLITICAL PARTY LEADERS

அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் இன்று (23/03/2021) பிரச்சாரத்திற்காக காரில் சென்றுகொண்டிருந்த போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சைப் பலனின்றி உயிர்பிரிந்தது. இந்த நிலையில், அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முகமது ஜானை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தர வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மீதும், அ.தி.மு.க. தலைமை மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டவர் முகமது ஜான். முகமது ஜான் மறைவு செய்திக் கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்" என்று தெரிவித்துள்ளனர்.

Advertisment

ADMK MP INCIDENT POLITICAL PARTY LEADERS

அதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சராக, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்து சீர்மிகு பணியாற்றியவர். மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் குரலாக ஒலித்துக் கொண்டிருந்த அவரது மறைவு தமிழக மக்களுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்"இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அ.தி.மு.க.வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அ.தி.மு.க.வின் சிறுபான்மை சமுதாயத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான முகமது ஜான் மிகவும் எளிமையானவர். மக்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவர். அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு இழப்பாகும். மறைந்த முகமது ஜான் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க.வினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

admk cm edappadi palanisamy DEPUTY CM PANEER SELVAM incident rajya sabha mp
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe