Advertisment

ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பரை தாக்கிய அதிமுக எம்பி!

திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆளும் கட்சியை சேர்ந்த உதயகுமார். இவரின் சொந்த ஊர் நிலக்கோட்டை என்பதால் தினசரி திண்டுக்கல் போய்வருவது வழக்கம்.

Advertisment

அதுபோல்தான் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற அதிமுக எம்பி உதயகுமார் அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது. அப்போது ரயில்வே கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பர் மணிமாறனிடம் சொல்லி இருக்கிறார்.

Advertisment

 AIADMK attacking Kate Kepper

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அதற்கு கேட் கீப்பர் மணிமாறன் ரயில் வரப்போவதால் தற்பொழுது கேட்டை திறக்க முடியாது என்று கூறி இருக்கிறார். அதற்கு எம்பி உதயகுமார் நான் எம்பி சொல்கிறேன் கேட்டை திறந்து விட்டு அதற்கப்புறம் மூடு என்று கூறியிருக்கிறார். ஆனால் மணிமாறனோ கேட்டை மூடினால் ரயில் வந்ததுக்கு அப்புறம் தான் திறப்போம். அதுதான் விதி முறை, அதை மீறி திறக்க முடியாது என்று கூறி இருக்கிறார்.

admk mpadmk

அதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மணிமாறனை தாக்கிவிட்டு தன்னுடன் வந்த ஆட்கள் மூலமாக கேட்டை திறக்க சொல்லி சென்றார். இதனால் டென்ஷன் ஆன மணிமாறன் ரயில்வே ஊழியர்கள் வரவழைத்து ரயில்வே கேட்டை மூடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மதுரை இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பயணிகள் ரயில் பாதியில் நின்றது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள், அதுபோல் மணிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்படி இருந்தும் ரயில்வே ஊழியர்களிகள் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

.

இப்படி அதிமுக எம்பி கேட் கீப்பர் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 AIADMK attacking Kate Kepper

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் அதிமுக எம்பி உதயகுமார் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் திடீரென ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கேட் கீப்பர் மணிமாறன் செல்போன் பயன்படுத்திக்கொண்டு கேட்டை மூடியதாகவும் இப்படி அலட்சியமாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தன்னை கேட் கீப்பர் மணிமாறன் தாக்கியதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக கூறி அதிமுக எம்பி உதயகுமார் கேட் கீப்பர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை கண்ட ரயில்வே ஊழியரான கேட்கீப்பர் மணிமாறனும் எம்.பி.உதயகுமார் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். தற்போது திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றஉதயகுமார் பின் மதுரை சென்றுள்ளார்.

.

உதயகுமாருக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் முதன் முதலில் ஜெ சீட் கொடுத்து வெற்றி பெற்ற வைத்தார். அப்படி இருந்தும் ஜெ மறைவுக்கு பிறகு டிடிவி பக்கம் போய் விட்டு மீண்டும் ஆளும் கட்சியில் சேர்ந்தார். இந்த நிலையில் தான் கேட்கீப்பரை தாக்கிய சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

attack MP police Train uthayakumar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe