தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (18/03/2022) காலை 10.00 மணிக்கு தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று (19/03/2022) மாலை 06.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கி, நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சிப் பணிகள், சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது, உட்கட்சி விவகாரம் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் கூறுகின்றன.