corona

திருவண்ணாமலை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் மற்றும் மாவட்டஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கவும்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செப்டம்பர் 9ம் தேதி திருவண்ணாமலை வந்தார். முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில், அதிகாரிகள், அவரை சந்திப்பவர்கள், நலத்திட்ட உதவி பெறுபவர்கள் என அனைவருக்கும்கரோனாபரிசோதனை செய்து, அவர்களுக்குநெகட்டிவ்எனமுடிவுவந்திருப்பவர்களை மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்க வேண்டும் என முதல்வர்அலுவலகத்திலிருந்துஉத்தரவிடப்பட்டது.

Advertisment

அதனைத்தொடர்ந்துஆய்வுக்கூட்டம் உட்பட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர் உட்பட மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும்பாதுகாப்புப்பணியில்ஈடுபடும்காவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்கள் என சுமார் 800 பேருக்குகரோனாபரிசோதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், ஆரணி சுற்றுலா மாளிகை, மருத்துவமனை வளாகம் என இதற்கென சில இடங்களில் மருத்துவ முகாம் அமைத்துகரோனாபரிசோதனை நடத்தப்பட்டது.

Advertisment

ஆரணியில் அமைச்சர்சேவூர்.ராமச்சந்திரன், அவரது உதவியாளர்,கார்ஓட்டுநர்,எஸ்கார்ட், கட்சி முக்கிய பிரமுகர்கள் செப்டம்பர் 7ம் தேதி பரிசோதனைசெய்துகொண்டனர். அவர்களுக்கானமுடிவுசெப்டம்பர் 8ம் தேதி காலையே வந்துவிட்டது. இதில் அமைச்சருக்குகரோனாஉறுதியாகியுள்ளது. இந்தத் தகவல் மாவட்டத்தில் உள்ள உயர்அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அதனை வெளியே சொல்லாமல் அப்படியேசைலண்டாகஇருந்துள்ளனர்.

இந்தத் தகவல் செப்டம்பர் 8ம் தேதி மாலை முதல்வர்அலுவலகத்துக்குத்தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக அதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர். எப்போதுமுடிவுவந்தது எனக்கேட்டுடென்ஷனானஅவர், உடனே அமைச்சரின்லைனுக்குசென்று அவரை சென்னைக்கு வரச்சொல்லி, மருத்துவமனையில்அட்மிட்டாகசொல்லியுள்ளார். அமைச்சர் தனது உதவியாளருடன்ஆரணியிலிருந்துசென்னைக்குப்புறப்பட்டார்.

அமைச்சர் தனக்குகரோனாஎன்பதை மறைத்து முதல்வருடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளார்.அவருக்குச்சாதகமாக அதிகாரிகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் விவகாரம் தெரிந்து முதல்வர் அலுவலகம் எச்சரிக்கை செய்து அவரை மருத்துவமனையில்அட்மிட்டாகசெய்தது பரபரப்பாகியுள்ளது.