Advertisment

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது வழக்கு!

admk mla police compliant

Advertisment

கடந்த சில மாதங்களாக, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ், தோழி இன்னாசியம்மாளுடன் ஆபாசமாகப் பேசியதும், அந்தப் பேச்சால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரீட்டா குமுறலை வெளிப்படுத்தியதும், ரெக்கார்ட் செய்யப்பட்ட ஆடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தன்னைப் பற்றி ஆபாசமாகப் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ், இன்னாசியம்மாள், முனியாண்டி மற்றும் ராமையாபாண்டியன் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் ரீட்டா ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் மான்ராஜ் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நான்கு பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் (354 A(2) 506 (1), 509 IPC, 4 of TNPHW Act, 67 OF IT Act) கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.

admk MLA police Srivilliputhur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe