hjk

Advertisment

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

அதிமுகவின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபு. இவர் இன்று காலை கல்லூரி மாணவி ஒருவரை காதல் திருமணம் செய்துள்ளார். உறவினர்கள் மட்டும் பங்கேற்ற இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. பிரபு அதிமுக அணி பிரிவின் போது தினகரன் ஆதரவாளராக இருந்து வந்தார்,பிறகு முதல்வரை சந்தித்து பேசினார். தற்போதுதான் சசிகலா ஆதரவாளர் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இவர் விரைவில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று கூறப்படுகிறது.