வாசுதேவநல்லூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழகத்திலும் எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், வாசுதேவநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.