விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி அ.தி.மு.கவை சேர்ந்த சக்கரபாணி, வானூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் பதவியில் உள்ளார். இவரது சொந்த ஊர் வானூர் தாலுகா காடன்குளம். இவருக்கும் இவரது மனைவி விமலாவுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்பு காயச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கணவன் மனைவி இருவரும்,ஊருக்கு அருகிலுள்ள தைலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்தனர். அதற்கான பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வெளிவந்தது. அதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கணவன் மனைவி இருவரும் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்கள்.