சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய அ.தி.மு.க அமைச்சர்கள்!

ADMK ministers pay homage to muthuramalinga thever

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58 -ஆவது குருபூஜை தினமுமான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை - கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

அதேபோல், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும்,அவரது உருவப்படத்திற்கும்தமிழக அமைச்சர்கள் பலர் மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

admk jayakumar
இதையும் படியுங்கள்
Subscribe