Published on 30/10/2020 | Edited on 30/10/2020

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58 -ஆவது குருபூஜை தினமுமான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை - கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.
அதேபோல், சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் தமிழக அமைச்சர்கள் பலர் மலர்தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.