ஜெயலலிதா போன்றுஏழு மொழிகளில் பேசக்கூடியவர் எச்.ராஜா என அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

H RAJA

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் நடைபெற்ற சிவகங்கை மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் சிவகங்கை தொகுதி வேட்பாளர்எச்.ராஜா மற்றும் அதிமுக,பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

எச்.ராஜா தமிழில் பேசுவார், ஆங்கிலத்தில் பேசுவார், ஹிந்தியில் பேசுவார், தெலுங்கில் பேசுவார், கன்னடத்தில் பேசுவார் அம்மா அவர்களைப் போல ஏழு மொழிகளில் பேசும் ஆற்றல் பெற்ற ஒருவர் ஹெச்.ராஜா என புகழாரம் சூட்டினார்.

மேலும்நாம் இன்றைக்கு நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவில்லை மதிப்புக்குரிய மத்திய அரசை தேர்ந்தெடுக்க இருக்கிறோம் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.