Advertisment

'7-ஆம் தேதி இவர்களுக்கெல்லாம் ஏமாற்றம்தான் கிடைக்கும்' - அமைச்சர் உதயகுமார் பேட்டி!

admk minister udhayakumar pressmeet

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. இந்நிலையில் வருகின்ற 7-ஆம்தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிக்கப்படும் என அ.தி.மு.க தலைமைஅறிவித்திருந்தாலும்அமைச்சர்கள் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுதுதங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

நேற்று திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பற்றி பேசியது அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முதல்வரும் துணை முதல்வரும் நன்றாகப் பேசிக் கொள்கின்றனர். வரும் அக்டோபர் 7ம் தேதி அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

Advertisment

முதல்வரும் துணை முதல்வரும் பேசிக்கொள்ளவில்லை என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும். துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டதால்'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்ட விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் பங்கேற்கவில்லை. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு யதார்த்தவாதி எனவே யதார்த்தமாக அவ்வாறுகூறியுள்ளார் என்றார்.

ops_eps Dindigul Sreenivaasan RB uthayakumar minister admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe