கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரசு மருத்துவர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ஃபோக்டா எனப்படும் (Federation of Government Doctors’ Associations -FOGDA) அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர்… லட்சுமி நரசிம்மன். இவர் நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்வது, அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப்படிப்பில் சேர 50 சதவீத இட ஒதுக்கீடு, கலந்தாய்வு நடத்தி பணிநியமனம் மற்றும் பணிமாறுதல் வழங்குதல், சம்பள உயர்வு என 4 அம்ச நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டத்தை வழிநடத்திவந்தார் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். அதிலிருந்தே தொடர்ந்து பழிவாங்க ஆரம்பித்தது அரசு. சார்ஜ் கொடுக்கப்பட்டு 118 டாக்டர்கள் பனிஷ்மெண்ட் என்கிற பெயரில் 500 கி.மீ. தள்ளி தூக்கியடிக்கப்பட்டார்கள். டாக்டர் லட்சுமி நரசிம்மனும் பந்தாடப்பட்டார்.

Advertisment

admk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதில், 13 பெண் மருத்துவர்களின் பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில் ஆரம்பித்து அவர்களது குடும்பமே பாதிக்கப்பட்டது. ஒரு பெண் மருத்துவருக்கு கால் விபத்து ஏற்பட்டுவிட்டது. ஒரு மருத்துவரின் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறது. ஒரு மருத்துவரின் அப்பாவுக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது. இன்னொரு, பெண் மருத்துவரின் கணவருக்கு மன உளைச்சலால் மாரடைப்பே ஏற்பட்டது.

இதனால், 4 முறைக்குமேல் டாக்டர் லட்சுமிநரசிம்மன் புதுக்கோட்டைக்குப் போய் விஜயபாஸ்கரை சந்தித்து போராடிய டாக்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடரவேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.

Advertisment

நம்மாலதானே டாக்டர்களுக்கு இந்த பாதிப்பு என்று குற்ற உணர்வோடும் மன உளைச்சலிலும் இருந்தார். வாராவாரம், சென்னை வருவது, சுகாதாரத்துறை அமைச்சரை சந்திப்பது என 3 மாதங்கள் அலைந்துகொண்டிருந்தார். கடந்த 2020 பிப்ரவரி 6-ந்தேதி நெஞ்சுவலி என்று சேலம் மணிப்பால் மருத்துவமனையில் அட்மிட் ஆனவர், காலையில் இறந்துவிட்டார். 50 வயதுதான். இரண்டாவது, மூன்றாவது மகன்கள் பன்னிரெண்டாம் வகுப்புதான் படிக்கிறார்கள். சாகக்கூடிய அளவுக்கு மருத்துவப்பிரச்சனைகளே இல்லை. அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே அவரது உயிரை பறித்துவிட்டது என்கிறார்கள் மருத்துவத்துறையினர் வேதனையோடு.

இன்னும் எத்தனை டாக்டர்களை காவு வாங்கப்போகிறதோ சுகாதாரத்துறை?