Advertisment

பழனிசாமி அரசு சாதனை படைக்கிறது...!-அமைச்சர் செங்கோட்டையன்!

ADMK MINISTER SENGOTAIYAN

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமணமண்டபத்தில் சமூகநலத்துறைசார்பில் நடைபெற்ற தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில் "முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான். அவர் வழியில் ஆட்சி புரியும் தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் பொங்கல் திருநாளிற்கு பொதுமக்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 2,500 வழங்க ஆணைபிரப்பித்துள்ளார். அத்துடன் சர்க்கரை, அரசி,கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைப்பார்த்து திமுக வியந்து போய்யுள்ளது. என்ன கொடுக்கப் போகிறார்கள் என்று கேட்டார்கள், ஆனால் நான் அள்ளித்தருவேன் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீட் தேர்வே இருக்கக்கூடாது என்பதுதான் அரசின் கொள்கை. இருந்தாலும் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்விற்கு பயிற்சி பெற்ற நமது மாணவர்கள் 313 பேர்கள் மருத்துவர்களாகவும், பல் மருத்துவர்களாக 102 பேரும் என 415 பேர்களுக்கு மருத்துவப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலை இனி தமிழகத்தில் இருக்காது. தமிழகம் அமைதியான மாநிலம்,மின் வெட்டே இல்லாத மாநிலம்.இன்னும் ஆறு மாதகாலத்திற்கு பிறகு 5 லட்சம் நபர்களுக்கு வேலைகிடைக்கும் என்ற வரலாறு உருவாக்கப்படும். முதல்வரின் தொலைநோக்கு சிந்தனை அவ்வாறு உள்ளது. இதனை எல்லாம் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "தமிழகத்தின் வரலாற்றில் பொங்கல் பரிசாக ரூபாய்.2,500 வழங்கி முதல்வர் பழனிச்சாமி வராலறு படைத்துள்ளார். கிராமந் தோறும் 2,000 மினி கிளினிக் உருவாக்கியும் தமிழக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையிலும் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் இருக்கும் அரசை எந்த சக்தியாலும் 2021-ல் மாற்றி யமைக்க முடியாது. மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பழனிச்சாமியேஅமர்வார் என்றார்.

admk minister sengottaiyan
இதையும் படியுங்கள்
Subscribe