எடப்பாடி பழனிசாமி தான் எப்பொழுதும் முதல்வர் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.
'இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தை சந்திப்போம், எடப்பாடியாரை முன்னிறுத்தி களம் அமைப்போம், களம் காண்போம், வெற்றி கொள்வோம் 2021 நமதே'
என குறிப்பிட்டு கர்ஜனையுடனானட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த கேள்விக்கு, அமைச்சர் செல்லூர் ராஜு தேர்தலுக்குப்பின் முதல்வர்எம்.எல்.ஏ.க்களால்தேர்வு செய்யப்படுவார்கள் எனக் கூறியிருந்தநிலையில், தற்போது அதிமுக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த கருத்தினை வைத்துள்ளார்.