Advertisment

அப்போ நாங்க 2 லட்சம் தருவோம்... ராஜேந்திரபாலாஜி

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம்காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழை குடும்பங்களுக்கு மாதம் 6ஆயிரம் ரூபாய் என வாக்குறுதி அளித்துள்ளாரேஎன கேள்வி எழுப்பப்பட்டது.

Advertisment

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிஆவேசத்துடன்,

மாசம் 6 ஆயிரம் ரூபாய் என்றால் வருடத்திற்கு 72 ஆயிரம், நீங்கள்இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் இரண்டு லட்சம் தருகிறோம் என்று சொல்லிவிடுவோம். ஏமாற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? மாதம் 6,000 ரூபாய்கொடுக்க முடியுமா, எங்கு கஜானாவில் பணம் இருக்கு, பணம் இருந்தால் சொல்லனும். எங்க பணம் இருக்கு. இப்போது எல்லாருமே துண்டு பட்ஜெட்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பற்றாக்குறை பட்ஜெட்தான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

admk minister rajendarbalaji interview

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ராஜீவ் காந்தி (ராகுல்காந்தி என்பதற்கு பதிலாக) சொல்வது மிகப் பெரிய மோசடி. ஏழை எளிய மக்கள், விவசாய மக்களுக்கு பொய்யைச் சொல்லி ஓட்டு வாங்க பார்க்கிறார் என கூறியராஜேந்திரபாலாஜி மோடியை மாஸ்டர் மோடி, இந்தியாவின் கதாநாயகர், இந்தியாவைபாதுகாக்கக்கூடிய ஸ்டண்ட் மாஸ்டர், இந்தியாவில் இருக்கும் பிரச்சனைகளை சொன்னால் அதைமல்லுக்கட்டிதீர்த்துவைக்கும் மல்யுத்த வீரர். சமூகவிரோதிகளுக்கு அவர் வில்லனாக தெரிகிறார் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் எனவும் கூறினார்.

வைகோ, திமுக தலைவர் மு க ஸ்டாலினனை என்ன சொன்னாரு. நீங்கள் கவுன்சிலுடன் தேர்தலில்கூட நிற்பதற்கு தகுதி கிடையாது, உங்ககட்சி அழிப்பதுதான் என்னுடைய வேலை, தமிழர்களின் சாவுக்கு காரணமானவர்கள் நீங்கள்தான், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கட்சி காங்கிரஸ் என மேடை தோறும் பேசினார் வைகோ.

அவர் பேசிய சிடிக்களைநான் போட்டு காட்டவா. ஸ்டாலினைப் பற்றி அவர் பேசியதை. வைகோ ஒரு இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளார். அது என்ன இக்கட்டு என்று தான் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். எதில் சிக்கிக் கொண்டார் என்று தெரியவில்லை. அவரை ஏதோ பிளாக்மெயில் பண்ணி கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் அப்படி அவர் ஆதரவாக பேசுகிறார் எனக்கூறினார்.

minister admk rajendra balaji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe