admk minister os maniyan

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசியிருந்தார்.அதற்குப் பதிலடியாக பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்துவிட்டது. அதனால் இப்படி பேசுகிறார்," என்று பேசியுள்ளார்.

Advertisment

நாகை மாவட்டம் செட்டிச்சேரி அருகே உள்ள கடுவையாற்றின் குறுக்கே, 16 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள கதவணைக்குப் பூமி பூஜை போடும் விழா நடைபெற்றது. கதவணை பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

Advertisment

admk minister os maniyan

அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழல் செய்த அதிமுக அமைச்சர்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், "உலக அளவில் தலைகுனிவை ஏற்படுத்திய வீராணம் திட்டத்தில் மெகா ஊழல் செய்தது திமுக. வீராணம் திட்டத்தில் தகுதியற்ற ஒப்பந்ததாரருக்கு முன்பணம் வழங்கப்பட்டது. ஆனால்720 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நிறைவேற்றி, மக்களுக்குக் கொண்டு வந்தது அதிமுக அரசு. இப்படிப்பட்ட மெகா ஊழலை செய்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் நாற்காலி மேல் பதவி வெறி பிடித்துவிட்டது" என்று காட்டமாகப் பேசினார்.