தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார், அப்போது பேசுகையில், தமிழக தலைமைச் செயலாளர் எல்லாத்துறைகளிலும் சம்பந்தப்பட்டவர் என்பதால்தான் அவர் பேட்டியளித்தார்.தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்த பிறகு தான் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருந்தது என்றார்.
மேலும்,நோய்த் தொற்று பரவ திமுகதான் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசியலில்எந்த குறையும் காண முடியாது. முதல்வரின் யதார்த்தமான கருத்துக்களை கூட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.அதிமுக அரசின்செயல்பாடுகளைமக்கள் பாராட்டும் நிலையில் அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்தார்.