Advertisment

''நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு...''-அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி 

admk minister cv sanmugam press meet

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து,கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்,இன்றுஅவர் டிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

சசிகலா விடுதலையாவதையொட்டிஅதிமுக நிர்வாகிகள் சிலர் சசிகலாவை வரவேற்று பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்திருந்த நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குபதிலளித்த அமைச்சர், ''அதிமுகவினர் சசிகலாவை வரவேற்றுபோஸ்டர் அடிப்பது என்பது ஒரு பெரிய விஷயமா? நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போஸ்டர் ஒட்டுவார்கள்''என பதிலளித்தார்.

Advertisment

Posters sasikala CV Shanmugam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe