Advertisment

ஸ்டாலினை சாடும் டெல்டா அமைச்சர்கள்...!

நாகையில் தமிழக அரசு உத்தரவுபடி பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வழங்கினார்.

Advertisment

admk Minister Condemned Stalin

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஓ.எஸ் மணியன், " வெண்ணெயை சுண்ணாம்பு என்றும் சுண்ணாம்பை வெண்ணெய் என்றும் நம்ப வைப்பவர் மு,க.ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தல் வெற்றி திமுகவுக்கு, நீண்டநாள் நீடிக்காது. இந்த மாயை விரைவில் மறையும் என்றார். மேலும், நாகை மாவட்டம் முழுவதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் உடனடியாக திறக்கப்படும் என தெரிவித்தார்.

அதே போல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் காமராஜ், தொடர்ந்து வழக்கு போடுவதும், அதிகாரிகளை அச்சுறுத்துவதும் திமுக வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பாதிக்கு மேலாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2021ல் அதிமுக ஆட்சியை பிடிக்கும் அதற்கு அத்தாட்சியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

admk ministers Kamaraj o.s.maniyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe