Skip to main content

ஸ்டாலினை சாடும் டெல்டா அமைச்சர்கள்...!

Published on 06/01/2020 | Edited on 06/01/2020

நாகையில் தமிழக அரசு உத்தரவுபடி பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத் துண்டு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் வழங்கினார்.

 

admk Minister Condemned Stalin

 



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ஓ.எஸ் மணியன், " வெண்ணெயை சுண்ணாம்பு என்றும் சுண்ணாம்பை வெண்ணெய் என்றும் நம்ப வைப்பவர் மு,க.ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தல் வெற்றி திமுகவுக்கு, நீண்டநாள் நீடிக்காது. இந்த மாயை விரைவில் மறையும் என்றார். மேலும், நாகை மாவட்டம் முழுவதும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் உடனடியாக  திறக்கப்படும் என தெரிவித்தார். 

அதே போல் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடந்த விழாவில் பேசிய அமைச்சர் காமராஜ், தொடர்ந்து வழக்கு போடுவதும், அதிகாரிகளை அச்சுறுத்துவதும் திமுக வழக்கமாக கொண்டுள்ளது. தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பாதிக்கு மேலாக அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2021ல் அதிமுக ஆட்சியை பிடிக்கும் அதற்கு அத்தாட்சியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது என தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இட ஒதுக்கீடு கூடாது; இட ஒதுக்கீடு வேண்டும்’ - பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியை கிண்டலடித்த ஓ.எஸ். மணியன்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
OS Manian strongly criticized the BJP-BMC alliance
சுர்ஜித் சங்கர்

நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். நாகை அதிமுக கட்சி அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேட்பாளரை அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், "திமுக ஆட்சியில் போதை பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகிறது. ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் எனக் கூறியவர்கள் இதுவரை கொண்டு வரவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் தினந்தோறும் போராடி வருகின்றனர்.

OS Manian strongly criticized the BJP-BMC alliance

இட ஒதுக்கீடு என்றாலே அறவே வேண்டாம் என்கின்ற கட்சியோடு இட ஒதுக்கீட்டிலே பிறந்து வளர்ந்த ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். இது கொள்கையே இல்லாத கூட்டணி. அன்புமணி ராமதாஸ் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பிப்பதற்காகவே கூட்டணி வைத்துள்ளனர்." என்றார்.

Next Story

“6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்” - முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் உயர்நீதிமன்றம்

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Case against former Minister Kamaraj; “Investigation to be completed within 6 months” - High Court

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். அப்போது பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

மேலும் 2015 முதல் 2021 ஆம் ஆண்டு வரை பொது விநியோக திட்டத்தின் கீழ் உணவுப் பொருள் கொள்முதல் செய்ததில் 2 ஆயிரத்து 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பல முறை புகார் அளித்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்நிலையில் இரு வழக்குகளும் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, “இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 6 மாதங்களில் விசாரணை முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிரான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர்கள் இருவரும் டிசம்பர் 6 ஆம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜாராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.