
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோயில் கோசாலையில் பாரமரிக்கப்பட்டு வந்த 13 பசுக்கள்,பல்வேறு பகுதியில் உள்ள கிராம கோவில் பூசாரிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது.
ஏற்கனவே, இக்கோயிலுக்கு பக்தர்கள் சிலர் 16 பசுக்களைஇலவசமாகக் கொடுத்திருந்தனர். இந்தப் பசுக்களில்13-ஐ தான்,இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்து கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு 19 ஆம்தேதி மாலை தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்.
அமைச்சர் கருப்பணன், திடீரென இன்று மாடுகளைப் பூசாரிகளிடம் ஏன் வழங்கினார் என ர.ர.க்களிடம் கேட்டபோது,தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாாமியே நீடிக்க வேண்டும் என பவானி சங்கமேஸ்வரரிடம் வேண்டுதல் வைத்து அதற்காக அங்கு வளர்ந்த மாடுகளை ஏதோ ஒரு ஜோதிடரின் பேச்சைக் கேட்டு தானம் வழங்கினார் என்றார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)