கரூர் மாநகராட்சி 38-வது வார்டு அம்மன் நகர் பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு செல்போன் வழங்குவதாக தாந்தோணிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாக்காளர்களுக்கு செல்போன்களை விநியோகம் செய்துகொண்டிருந்த சங்கர் (21) என்பவரைப் பிடித்துள்ளனர்.
அவரிடமிருந்த 11 செல்போன்களை பறிமுதல் செய்த நிலையில், அதே பகுதியில் இருந்த ஈஸ்வரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தி, அவர் வீட்டிலிருந்த 26 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அதிமுக வேட்பாளர் சரவணன் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களும் கைப்பற்றப்பட்டது. மேலும், இதுகுறித்து காவல்துறையின் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.