Skip to main content

கோலாகலத்திற்கு தயாராகும் அதிமுக; கொடூரமாகப் பலியான ஒன்றியச் செயலாளர்! 

Published on 19/08/2023 | Edited on 19/08/2023

 

ADMK Member passes away in road accident near puthukottai
ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம்

 

நாளை மதுரையில் அதிமுக மாநாட்டு நடக்க உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகமானோரை மாநாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அனைத்து ஊர்களிலும் வேன்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் முகூர்த்த நாளான ஞாயிற்றுக் கிழமைக்கு கல்யாண நிகழ்ச்சிகளுக்குக் கூட வேன்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

 

மாநாடு முன் ஏற்பாடுகளில் மாஜி அமைச்சரும் புதுக்கோட்டை மேற்கு மாவட்டச் செயலாளருமான விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ தீவிரம் காட்டி வருகிறார். மாநாட்டுக்குத் தொண்டர்கள் செல்லும் போது உணவு, நடுவழியில் பஞ்சரானால் உடனே சரி செய்ய நடமாடும் பஞ்சர் ஒட்டும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாநாட்டுப் பந்தலில் நடக்கும் பணிகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளை வைத்து கண்காணித்து வருகிறார். 

 

கந்தர்வக்கோட்டை மாஜி எம்.எல்.ஏ. நார்த்தாமலை ஆறுமுகம், அன்னவாசல் ஒன்றியச் செயலாளரும், ஒன்றியக் கவுன்சிலருமான சாம்பசிவம் உள்பட பலர் நேற்று இரவு வரை மாநாடு முன் ஏற்பாடு பணிகளை பார்த்துவிட்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பும் போது தாவுது மில் நிறுத்தத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

 

ADMK Member passes away in road accident near puthukottai
மதுரையில் மாநாடு திடலில் ஓ.செ. சாமபசிவம்

 

ஒன்றியச் செயலாளர் தனது ஊரானா மருதாந்தலை செல்ல தனது மகனை வரச் சொல்லி இருந்த நிலையில், முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே இறங்கி தனது மகன் காரோடு நின்ற பக்கம் சாலையை கடந்த போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டை  நோக்கி அதிவேகமாக சென்ற கார் சாம்பசிவத்தை அடித்து தூக்கி வீசியது. இதில் சாம்பசிவம், சம்பவ இடத்திலேயே பலியானார். 

 

விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் மரணமடைந்த ஒன்றியச் செயலாளர் சாம்பசிவம் உடல் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளனூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர். 

 

இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. மாநாடு முன் ஏற்பாடு பணிகளை கவனித்து விட்டு வந்து விபத்தில் பலியான ஒன்றியச் செயலாளர் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க.வினர் உடைந்து போய் உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.