Advertisment

அதிமுக பிரமுகருக்கு சரமாரிவெட்டு... வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

சென்னை பல்லாவரத்தில் அதிமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

admk member attacked... Video footage released

சென்னை பல்லாவரம் சுந்தரேசன் தெருவை சேர்ந்த அதிமுக பிரமுகர் விஜயகுமார்.இவர் நேற்று மாலைஅப்பகுதியில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க லாரியில் தண்ணீர் விநியோகம் செய்துவந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக அதிமுக பிரமுகர் விஜயகுமாரை தாக்கிவெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். பின்னர் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அவரது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்கப்பட்ட நிலையில் பரங்கிமலை துணை ஆணையர் முத்துசாமி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். மேலும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்ட விஜய்குமாரை நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

விஜயகுமாரைதாக்கியது யார், இந்த சம்பவம் முன்விரோதத்தால் நடந்த சம்பவமா என போலீசார் பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர். விஜயகுமார் இதற்கு முன்கல்குவாரி எடுத்து வேலை செய்து வந்ததில் நடந்த முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Investigation police attack admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe