பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி பேரூர் அதிமுக செயலாளராக இருப்பவர் வினோத்(48). இவர், அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவிக்குபாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இந்நிலையில் அப்பெண், அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், வினோத் தொடர்ந்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை அவரது ஆசைக்கு இணங்கச் செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.