ADMK member and his son surrender in broadway case

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வியாசர்பாடி 59வது வட்ட திமுக நிர்வாகி சவுந்தரராஜன் என்பவர் தண்ணீர் கேன் போட்டுவந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு தண்ணீர் கேன்களை சவுந்தரராஜன் கொண்டுவந்திருக்கிறார். அப்போது ஆட்டோவில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிச்சாய்த்து, அங்கிருந்து தப்பிச்சென்றது.

Advertisment

இச்சம்பவம் குறித்து எஸ்பிளனேடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அதிமுக பிரமுகர் கணேசன், அவரது மகன் தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எஸ்பிளனேடு காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Advertisment