ரக

Advertisment

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்துக்கட்சிகளும் முடுக்கிவிட்டுள்ளன. அதிமுகவில் மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுத் தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளார்கள். திமுகவில் அதன் தலைவர்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்கள். மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னையில் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.