சென்னையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அரசு கொறடா ராஜேந்திரன் உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன், கே.பி.முனுசாமி எம்.பி., முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், மூத்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதல்வர், துணை முதல்வருடன் தனித்தனியே அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.