Advertisment

"சசிகலாவுக்கு பாதுகாப்பு வேண்டும்!" - அதிமுக பிரமுகர் மனு!

admk leader of theni district, sasikala police dgp

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா, பெங்களூருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், "சசிகலா பிப்ரவரி 8- ஆம் தேதி (திங்கள்கிழமை)காலை 09.00 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்" என்று டி.டி.வி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisment

தமிழகம் திரும்பும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கானஏற்பாடுகளை அ.ம.மு.க.வினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. நிர்வாகிகளும் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிவருகின்றனர். இது அ.தி.மு.க.வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

sasikala

இருப்பினும், சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்து ஒட்டிய அ.தி.மு.க. நிர்வாகிகளை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கினர்.

இந்த நிலையில், தேனி மாவட்டம், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.வின்அம்மா பேரவைஅவைத் தலைவர் வைகை சாந்தகுமார் என்பவர், தமிழகம் வரும் சசிகலாவுக்கு காவல்துறை பாதுகாப்பு கோரி தபால் மூலம் டி.ஜி.பி.க்கு மனு அனுப்பியுள்ளார்.

admk leader DGP Office police sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe