Advertisment

"அவர் பேசுவது அமமுகவினரிடம்தான்"- கே.பி. முனுசாமி பேட்டி!

admk leader kp munusamy pressmeet

Advertisment

சசிகலா, அதிமுகதொண்டர் ஒருவரிடம் பேசுவது போன்ற ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, "அதிமுகவை திசைத் திருப்பித் தொண்டர்களைக் குழப்ப முயற்சிக்கிறார் சசிகலா; அவரது எண்ணம் ஈடேராது. ஒரு அதிமுகதொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை; அவர் பேசுவது அமமுகவினரிடம்தான். சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருந்தால்தான் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும். அதிமுகவுக்கும், சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; அவர் அதிமுகவிலும் இல்லை. சசிகலாவுடன் உள்ளவர்கள் அவரைத் தூண்டிவிடுகிறார்கள். அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சசிகலா பேசிவருகிறார்.” என்றார்.

admk KPmunuswamy Leader pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe