vADMK leader joins DMK

பரங்கிப்பேட்டை அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி தலைமையில், துணை பெருந்தலைவர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி சாமிதுரை ஆகியோர் எம்.ஆர்.கே கல்வி நிறுவனங்களின் இயக்குநர் கதிரவன் முன்னிலையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை சென்னையில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்து சால்வை அணிவித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இவர்களுக்கு அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார்.

Advertisment

சென்னையில் உள்ள கலைஞர் சமாதியில் திமுகவில் இணைந்த ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டவர்களுக்கு பரங்கிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துபெருமாள், கலையரசன், கிள்ளை பேரூராட்சி து.தலைவர் கிள்ளை ரவீந்திரன், குமராட்சி திமுக ஒன்றிய செயலாளர் சங்கர், துணைச் செயலாளர் நாகராஜன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் பரந்தாமன் உள்ளிட்டவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களைத்தெரிவித்தனர்.

Advertisment