"நிர்வாகிகள் இ.பி.எஸ். பக்கம்; தொண்டர்கள் ஓ.பி.எஸ். பக்கம்"- ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி! 

publive-image

சென்னை சேத்துப்பட்டில் இன்று (24/06/2022) மாலை 05.30மணிக்குச்செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜே.சி.டி.பிரபாகர், "நிர்வாகிகள் இ.பி.எஸ். பக்கமும், தொண்டர்கள் ஓ.பி.எஸ். பக்கமும் உள்ளனர். பொதுக்குழுவில்எங்களைக்கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஒற்றைத் தலைமை என ஏற்கனவே சொல்லித் கொடுத்ததைப் பொதுக்குழுவில் ஒப்பித்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும் போதே பாதியில்மைக்அணைக்கப்பட்டது; தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. பொதுக்குழுவில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தைஅவமதித்துள்ளனர். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். கட்சியோ, இ.பி.எஸ். கட்சியோ அல்ல; தொண்டர்களின் கட்சி. செயல் திட்டத்தில்இல்லாததைப்பொதுக்குழுவில் எழுப்பியது தவறு. சிலதலைவர்களுக்குகட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில்லை. இரட்டைத் தலைமை தொடர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

admk Leader pressmeet
இதையும் படியுங்கள்
Subscribe