பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

ADMK LEADER EDAPPADI K PALANISWAMI WROTE LETTER FOR PM NARENDRA MODI

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக்கடிதத்தில், "கொச்சியில் இருந்து அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்த 9 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டவ்-தே' புயலில் சிக்கி மீனவர்கள் மாயமானதால், 9 பேரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

admk Prime Minister Modi
இதையும் படியுங்கள்
Subscribe