Skip to main content

பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

ADMK LEADER EDAPPADI K PALANISWAMI WROTE LETTER FOR PM NARENDRA MODI

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்தக் கடிதத்தில், "கொச்சியில் இருந்து அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இந்த 9 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'டவ்-தே' புயலில் சிக்கி மீனவர்கள் மாயமானதால், 9 பேரின் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். கடற்படை, விமானப்படை மூலம் மீனவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வளர்ச்சித் திட்டங்கள் கிடைத்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்” - எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 Vote for admk to get development plans Edappadi Palaniswami campaign

திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் இருந்து வரக்கூடிய நமக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்கு, தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சி கிடைக்க, தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி கிடைக்க, சுதந்திரமாக நாடாளுமன்றத்தில் பேசி மக்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அதிமுக யாரையும் நம்பாமல் சொந்த காலில் நிற்கிறோம். மத்தியில் திமுக அரசு 17 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து இதுவரை தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டு அதிமுக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு தேவையான அத்தனை அடிப்படை வசதிகளையும் உடனுக்குடன் செய்து காப்பாற்றியது. ஆனால் தற்போது ஏற்பட்ட சிறிய புயலுக்கே திமுக அரசு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறவில்லை. நிதியை முறையாக கேட்டு பெறுவது மாநில அரசின் கடமையாகும். ஒவ்வொரு முறையும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டு மாநில அரசு முறையாக ஆட்சி செய்யவில்லை.

இந்த ஆட்சியை தமிழகத்திலிருந்து அகற்ற வெகு நாட்கள் இல்லை. அதிமுக விரைவில் ஆட்சியை அமைக்கும். திமுக அரசை ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள துறையூர் நகருக்கு அதிமுக அரசு ஆட்சியில் இருந்த போது தான் துறையூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. அதேபோன்று காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டது.  இதேபோன்று எண்ணற்ற நலத்திட்டங்கள் முசிறி, மண்ணச்சநல்லூர் சமயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது .

எனவே உங்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும். எனவே அதிமுக வேட்பாளர் சந்திரமோகனுக்கு நமது வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி மற்றும் அதிமுக கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த குட்டி எம்.ஜி.ஆர்.

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
A.D.M.K. Kutty MGR collected votes against the candidate Karuppaiya

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தினந்தோறும் வாக்குகளை சேகரித்து வருகிறார். மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாதனைகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை பிரச்சாரம் செய்யாத இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது ஒரு சிறுவன் குட்டி எம்.ஜி.ஆர். வேடம் அணிந்து பிரச்சார வாகனத்தில் சென்றபடி வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் வழி நெடுகிழும் குட்டி எம்.ஜி.ஆரைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரெத்தினவேல், மனோகரன், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக நேற்று காலை திருச்சி தென்னூர் பகுதி அருகே அ.தி.மு.க. தலைமை பணிமனை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் கருப்பையாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக உள்ளது. திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. நிர்வாகிகள் கடுமையாக உழைத்து கருப்பையாவின் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும். அவ்வாறு கருப்பையா வெற்றி பெறும் பட்சத்தில் உங்களில் பலர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.