Advertisment

"முன்னாள் அமைச்சரை கைது செய்ய வேண்டியுள்ளது" - உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு வாதம்!

admk leader and former minister chennai high court polcie

துணை நடிகை கொடுத்த பாலியல் புகாரில் அ.தி.மு.க. நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த முன்ஜாமீன் மனு நீதிபதிகள் முன்பு இன்று (09/06/2021) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறைத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பாலியல் வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய வேண்டியுள்ளது.மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்ஜாமீன் தரக்கூடாது. துணை நடிகை மற்றும் மருத்துவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது; ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர் முக்கிய பதவியை வகித்ததால் சாட்சிகளைக் கலைக்கக் கூடும்' எனத் தெரிவித்தார்.

Advertisment

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்; இடைக்கால பாதுகாப்பாக முன்ஜாமீன் வேண்டும். குற்றவாளி என்பதற்கு முகாந்திரம் இருந்தால் கைது செய்யட்டும்' என வாதிட்டார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

chennai high court police manikandan admk former minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe