Advertisment

திமுகவில் ஐக்கியமான ஜோதி

admk lawyer jothi join in DMK

அதிமுகவின் பிரதான வழக்கறிஞராக இருந்த ஜோதி தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார்.

Advertisment

அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் முக்கிய வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்தவர் வழக்கறிஞர் ஜோதி. கடந்த 2020 ஆம் ஆண்டு திமுகவையும்,2ஜி வழக்குகள் குறித்தும்எடப்பாடி பழனிசாமி விமர்சித்த பொழுது அதற்கு திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எதிர் விமர்சனம் வைத்திருந்தார்.

Advertisment

ஜெயலலிதா மீதான தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி நேரடியாக என்னுடன் விவாதிக்க தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பி இருந்தார்.அப்பொழுது அதிமுகவின் வழக்கறிஞர் ஜோதி, 'அது குறித்து விவாதிக்க தான் தாயார்; ஆ.ராசா தயாரா?' என பதிலுக்குசவால் விட்டிருந்தார். அந்த அளவிற்கு கடும் விமர்சனங்களை வைத்திருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வரை சந்தித்த வழக்கறிஞர் ஜோதி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திமுக தொடர்ந்த டான்சி வழக்கில் ஜெயலலிதாவிற்காக ஆஜரானவர் வழக்கறிஞர் ஜோதி என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

lawyers jothi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe