Skip to main content

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த குட்டி எம்.ஜி.ஆர்.

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
A.D.M.K. Kutty MGR collected votes against the candidate Karuppaiya

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனையோட்டி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் தினந்தோறும் வாக்குகளை சேகரித்து வருகிறார். மேலும் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாதனைகளையும் எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை பிரச்சாரம் செய்யாத இடங்களில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையா நேற்று மாலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது ஒரு சிறுவன் குட்டி எம்.ஜி.ஆர். வேடம் அணிந்து பிரச்சார வாகனத்தில் சென்றபடி வேட்பாளர் கருப்பையாவுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைப் பார்த்த பொதுமக்கள் வழி நெடுகிழும் குட்டி எம்.ஜி.ஆரைப் பார்த்து உற்சாகம் அடைந்தனர். பிரச்சாரத்தின் போது அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் ரெத்தினவேல், மனோகரன், இளைஞரணி மாநில இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக நேற்று காலை திருச்சி தென்னூர் பகுதி அருகே அ.தி.மு.க. தலைமை பணிமனை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர் கருப்பையாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக உள்ளது. திருச்சி மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. நிர்வாகிகள் கடுமையாக உழைத்து கருப்பையாவின் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும். அவ்வாறு கருப்பையா வெற்றி பெறும் பட்சத்தில் உங்களில் பலர் எம்.எல்.ஏ.வாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்