ADVERTISEMENT

"வேட்பாளர் இவர்தான்... இடையூறாக யார் வந்தாலும் நிராகரிப்போம்" - கே.பி.முனுசாமி பேட்டி!  

06:37 PM Dec 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

"அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதற்கு யார் இடையூறாக வந்தாலும் அவர்களை நிராகரித்துவிடுவோம்" என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஆதாலியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, "புதிய கட்சி தொடங்கும் அனைவரும் எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் எனக் கூறுகிறார்களே தவிர, யாரேனும் கலைஞர் ஆட்சி தருவேன் எனக் கூறுகிறார்களா? அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். இதற்கு யார் இடையூறாக வந்தாலும் அவர்களை நிராகரித்துவிடுவோம்" என்றார்.

ஏற்கனவே கடந்த 27-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் நடந்த அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்கப் பொதுக் கூட்டத்தில், "கடந்த 50 ஆண்டு காலமாக எந்த தேசியக் கட்சியும் தமிழகத்தில் உள்ளே வரவிடாமல் திராவிட இயக்கம்தான் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இப்பொழுது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய சில அரசியல் கட்சிகள் முயல்கின்றன. திராவிட இயக்க ஆட்சி இந்த நாட்டை சீரழித்துவிட்டதாக சில தேசியக் கட்சிகள் சொல்கிறது. சில சந்தர்ப்பவாதிகள் சொல்கிறார்கள். உயர்நிலையிலிருந்து நீண்டகாலமாக, தந்தை பெரியார் காலத்திலிருந்தே இந்த இயக்கத்தை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு சமூகம், ஒரு கூட்டம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையில் தான் ஆட்சி. இதிலே கூட்டணி ஆட்சி என்பதற்குப் பொருளும் இல்லை தேவையும் இல்லை" என ஆவேசமாகப் பேசியிருந்தார் கே.பி.முனுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT