Advertisment

'ஆசையே அலை போலே... '- திருமாவை கிண்டலடித்த ஜெயக்குமார்

nn

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் தேர்தல் களப்பணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு 2026 தேர்தலில் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் தனக்கும் முதலமைச்சர் கனவு இருப்பதாகவும் அதற்கான மையப் புள்ளிகள் அமையவில்லை என கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி எழுப்பினர்.

'ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே என தொல் திருமாவளனை பாட்டு பாடி கிண்டல் அடித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''கனவு காணுங்கள் என அப்துல் கலாம் கூறியது போன்று எல்லோரும் கனவு காணலாம். அதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.

Advertisment

2026 தேர்தலில் பாமக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் அதிமுக வரவேற்குமா? என்ற கேள்விக்கு, ''திமுகவின் அராஜக, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் பாஜக தவிர்த்து ஒற்றைக் கருத்துள்ள கட்சிகள் அதிமுக தலைமையை ஏற்று வந்தால் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரிசீலனை செய்வார். மத்தியில் 12 ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த திமுக,கச்சத்தீவு, காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு போன்ற மாநில உரிமைகளை காப்பாற்றவில்லை'' என்றார்.

பூரண மதுவிலக்கு தொடர்பான கேள்விக்கு, ''ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது படிப்படியாக மதுக்கடைகளை மூடி பூரண மதுவிலக்கு அமல்படுத்துவது தங்களது நிலைப்பாடாக இருந்தது. ஆனால் திமுகதேர்தல் அறிக்கையில் பூரணமாக விலக்கு அமுல்படுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்போது மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து தமிழ்நாடு குடிகாரர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மாறிவிட்டது' என்றார்.

jayakumar admk vck Thirumavalavan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe