Advertisment

அ.தி.மு.க. பொறுப்பாளர்களை நியமித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி!

A.D.M.K. Interim General Secretary Edappadi Palaniswami announced action by appointing officials!

அ.தி.மு.க. கட்சியின் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக, அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

Advertisment

A.D.M.K. Interim General Secretary Edappadi Palaniswami announced action by appointing officials!

அ.தி.மு.க.வின் தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்களாக பெஞ்சமின், ராஜன் செல்லப்பா, ந.பாலகங்கா, செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ப.தனபால், ஓ.எஸ்.மணியன், காமராஜ், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, ராஜன் செல்லப்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்." இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

admk Announcement
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe