ADMK if Corona increases Consideration to conduct the General Assembly online!

கரோனா நோய்த்தொற்று அதிகரித்தால், அ.தி.மு.க.வின் பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்தப் பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 11- ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்திருக்கிறது. இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதால், ஆன்லைன் மூலம் பொதுக்குழுவை நடத்த மாற்றுத் திட்டத்தையும் அ.தி.மு.க.வின் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளதாக தகவல் கூறுகின்றன. மேலும், இது தொடர்பாக, கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

பெரும்பாலும் பொதுக்குழுவை நேரடியாக நடத்தத் திட்டமிட்டிருக்கும் நிலையில், கரோனாவைக் காரணம் காட்டி, அரசு அனுமதி வழங்காத பட்சத்தில், இந்த மாற்றுத் திட்டத்தைப் பயன்படுத்தவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முடிவெடுத்திருப்பதாகக் கூறுகின்றன.