Advertisment

அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டாவது நாளாக பரபரப்பு!

admk head office incident contiune on second day

Advertisment

அதிமுககட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (04/12/2021) பிற்பகல் 03.00 மணியளவில் நிறைவடைந்தது.

இதனிடையே இன்று காலை 11.45 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவை வாங்கவந்த சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவரை, அலுவலகத்தின் வெளியே இருந்த 100க்கும் மேற்பட்ட கட்சியினர் தாக்கி வெளியே அனுப்பினர்.

பின்னர் அங்கிருந்த காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பாக அருகில் இருந்த மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். நேற்றைய தினம் இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற நிலையில், இன்றும் தொடர்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

incident office admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe