admk Chepauk Tiruvallikeni ... Video released shocking

Advertisment

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் முடிந்து மனுதாக்கல், தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக இயங்கி வருகின்றன.இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்இருப்பதால், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். போலீசாரும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுக பணம் பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அதிமுகசிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர்ஜெ.எம்.பசீர் வாக்காளர்களுக்கு500 ரூபாய் வழங்கும் வீடியோ வெளியான நிலையில், இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.