/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CHENNAI HIGH COURT 1_16.jpg)
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (22/08/2022) விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
ஜூலை 11- ஆம் தேதி அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஜூன் 23- ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் அவர் தீர்ப்பளித்திருந்தார்.
இந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
Follow Us